உண்டு கொழுப்பவன் முதலாளி
உயிர்வாட உழைப்பவன்
தொழிலாளி-
இதைக் கண்டு மிருந்திடல் தீதாம்
கண்ணி ருந்துமது பழுதாம்!
அள்ளிக் கொடுத்தநீ அலைவதா?
ஆண்டியாய் நின்று திரிவதா?!-
இதைக் கிள்ளி எறிந்திட அறிந்திடு
கீழ்நிலை கண்டு வருந்திடு!
மாற்றார் உயர்ந்திட வாழ்வதா?
மண்டியிட்டே அங்குத் தாழ்வதா?-
பகை உற்றவர்க் கேநீ இருப்பதா?
ஓயாது செத்துப் பிழைப்பதா?!
ஆதியும் அந்தமும் ஏழையாய்
ஆனது உன்விதி என்பதா?-
அட நீதியும் இதுவென கழிப்பதா?
நீள்நிலம் உன்னைப் பழிப்பதா?
பாரியும் ஓரியும் வாழ்ந்தநம்
பாரினில் பஞ்சையாய் வாழ்கிறாய்-
இங்கே சேரியை மாடமாய் மாற்றிடு
செயலில் அதைநீ காட்டிடு!